உடல் எடை குறைக்க என்ன செய்ய வேண்டும் - Health Tips & Hot News

we have provide complete health tips, weight loss tips, weight loss foods and complete health maintenance. Then we are give the hot news for every day, and funny videos, news videos, all of provide the english and tamil language

Hot

Post Top Ad

Wednesday, 7 September 2016

உடல் எடை குறைக்க என்ன செய்ய வேண்டும்





இப்படி இறுக்கும் நீங்கள் இப்படி மாற பின்பற்ற வேன்டியவை......



உடல் எடை குறைய:


                            உடல் எடை குறைக்க விரும்புவர்களுக்கு அருகம்புல் மிக சிறந்த மூலிகை. அருகம்புல் சாறை தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் சுத்தமாகி உடல் எடை குறையும்.

   குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.

முதல்நாள் இரவே அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் ஓமத்தை பொடிசெய்து போட வேண்டும். இந்த கலவையை ஒரு குவளை நீரில் அடுப்பில் கொதிக்க வைத்து இறக்கிவிடவும். பின்பு அதை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.மறுநாள் காலை அதை நன்றாக சாறுபிழிந்து சக்கையை நீக்கிவிட வேண்டும். இந்த சாறை தினமும் இதே போல் தயார் செய்து பத்து நாட்கள் வேறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை வற்றிவிடும்.
வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் மெலியும். ஆனால் கொதி நீரில் தேன் கலக்கக்கூடாது மிதமான சூட்டில் மட்டும் தான் தேன் கலக்க வேண்டும்.
3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது.இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.
டயட் என்றால் பட்டினி கிடப்பதில்லை.அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதும் இல்லை.இப்படி செய்ய ஆரம்பித்தால் வெறுப்புதான் வரும்.எதையும் மனதிற்கு பிடித்து செய்ய வேண்டும்.ஒரு வேளை கூட பட்டினி கிடக்காதீர்கள்.அப்புறம் உங்களையும் அறியாமல் அடுத்த வேளை அதிகம் சாப்பிட்டு விடுவீர்கள்.மீண்டும் உணவு கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
இஞ்சியை சாறெடுத்து அதில் நெல்லிக்காய் சாறை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
எப்போதும் நமது எண்ணங்கள் பாசிட்டிவாக இருந்தால்தான் எந்த வெற்றியையும் அடைய முடியும்.அது இந்த உடல் மெலிவதற்கும் பொருந்தும்.உடல் மெலிய வேண்டும் என்று உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பித்து விட்டால், இனி உடல் எடை குறையும்,இப்போது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நீங்களே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும்.என்ன் இது 2 வாரமாகியும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.
எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.
                          இந்த வழியை பின்பற்றுங்கள் கண்டிப்பாக பலன் உண்டு

No comments:

Post a Comment

Post Top Ad