ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா என வரிசையாக நகைச்சுவை, சென்டிமென்ட் படத்தில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் சற்று மாறுபட்டு கெத்து படத்தில் ஆக்ஷன் ஹீரோவாகவும், மனிதன் படத்தில் வழக்கறிஞராகவும் நடித்தார்.
தற்போது மீண்டும் காமெடி கதை களத்துக்கு திரும்பி இருக்கிறார்.
இதில் ஒரு நாள் கூத்து பட நாயகி நிவேதா ஹீரோயின்.
இவர் முக்கிய வேடத்தில், நடிக்கிறார் பார்த்திபன், உதயநிதியுடன் இணைந்து காமெடியில் கலக்கவுள்ளார் . மயில்சாமி, சூரி, நமோ நாராயணன், சுந்தர், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இயக்குனர்கள் விக்ரமன், பொன்ராம் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தளபதி பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. டி.இமான் இசை. யுகபாரதி பாடல்கள். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு. ஸ்தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படம்பற்றி இயக்குனர் கூறும்போது, ரஜினி முருகன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், படங்களின் நகைச்சுவையை விட தூக்கலாக, குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் வண்ணம் இப்படம் இருக்கும். வரும் 19ம் தேதி முதல் தேனி மாவட்டத்தில் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகிறது. மதுரை, சத்தியமங்கலம், கோவை, மதுரை பகுதியிலும் படப்பிடிப்பு நடக்க உள்ளது’ என்றார்.


No comments:
Post a Comment